வெயிலில் நனைந்த மழை
வெயிலில் நனைந்த மழை, ச. மணி, கோவை, விலை 100ரூ.
மழையுடன் ஒரு பந்தம் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்று மழையின் கருணையைப் பாடிச் சென்றான் தமிழ் மறை தந்த வள்ளுவன். மழையைப் பாடாத கவிஞனே இல்லை. கவிஞர்களுக்கும் மழைக்குமான உதற முடியாத இந்த பந்தத்தை ச. மணியின் கவிதைகள் நமக்குப் பரிமாறுகின்றன. மழையையும் அது தந்துவிட்டுப்போன அனுபவங்களையும் மீட்டெடுக்கும் கவிதைகளால் நிறைந்த இத்தொகுப்பில், நனைந்தும் நனையாத நினைவுகளால் உறைந்து நிற்கும் காட்சிகள் கம்பீரமான எளிமையுடன் சடசடக்கின்றன. இத்தொகுப்புக்கு அறிவுமதி அளித்திருக்கும் அணிந்துரை, நள்ளிரவில் ரகசியமாய் வந்துவிட்டுப்போன மழைபோல் இருக்க, புத்தகத்தின் அட்டையில் இடம்பெற்றிருக்கும் லியோநாட்ரின் மழை ஓவியம் முப்பரிமாண அமைப்பில் அச்சிடப்பட்டிருப்பது பளிச்சென்று ஈர்க்கிறது. -சொல்லாளன். நன்றி: தி இந்து, 20/6/2015.