வெயிலில் நனைந்த மழை
வெயிலில் நனைந்த மழை, ச. மணி, இடையன் இடைச்சி நூலகம், கோவை, பக். 96, விலை 100ரூ. கவிதைகளை வெயிலில் நனையவிடலாம், மழையில் காயப் போடலாம், அது இலக்கணப் பிழையோ, சொற்பிழையோ ஆகாது. கவிதையின் கொண்டு கூட்டுப் பொருள்கோளில் பொருட்பிழை நிகழாது கவிஞன் நிகழ்த்திக் காட்டும் உத்தி அது. கவிஞர் ச. மணி வெயிலில் நனைந்த பிறகும் மழை மழையாகவே இருக்கிறது என்பதை நம்முன் காட்சிப்படுத்துவது அனுபவ வெளிப்பாடு. நூற்றாண்டினாலும் பக்தர்களின் பாதங்களை அலம்பி விடும் தெப்பக்குளத்து மழை கவிஞரின் படிமக் காட்சிக்கு சாட்சி. […]
Read more