தமிழர் வாழ்க்கையில் பூக்கள்
தமிழர் வாழ்க்கையில் பூக்கள், ந. முருகேச பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 164, விலை 125ரூ.
To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024479.html பத்திரிகைகளில் வெளியான, 15 கட்டுரைகளின் தொகுப்பு. பூவுக்கும், பெண்ணுக்கும் உள்ள தொடர்பு, எதற்கெடுத்தாலும் மருந்து சாப்பிடும் மனப்பான்மை, புத்தகங்களின் பயன்பாடு, நூலகம் என, பல தலைப்புளும் சிந்தனையை தூண்டும் செய்திகளை உள்ளடக்கி இருக்கின்றன. கொசுவுக்குப் பயந்து மனிதன் படும் துன்பத்தையும், சிற்றுயிர்களிடம் மனிதன் கொண்டிருந்த இரக்கத்தையும், உயிரியல் பூங்காக்களில் பார்க்க வேண்டியிருக்கும் சிட்டுக் குருவிகளையும், கிராமத்து மணத்துடன் காட்டியுள்ளார், நூலாசிரியர். தங்கத்தை மஞ்சள் பிசாசு என்று வர்ணித்து நகைப்பதை அம்பலப்படுத்தியுள்ளார். அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அத்தனை பிரச்னைகளையும் பற்றி அலசும் கட்டுரை தொகுப்பு இந்த நூல். கி.பி. 9ஆம் நூற்றாண்டில் மாணிக்கவாசகர் வாழ்ந்த காலத்தில் பகல் வேளையில் நரிகள் ஊளையிடும் அடர்ந்த வனப்பகுதியான மயிலாப்பூர், இன்று கான்கிரீட் கட்டடங்களால் சூழப்பட்டிருந்தாலும், அங்கு மக்கள் அசலான வாழ்க்கையை உற்சாகத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் (பக். 113-114). -முகிலை ராசபாண்டியன். நன்றி: தினமலர், 2/6/2015.