445
குமரி மாவட்டத் தமிழ் வழக்கு, முனைவர் ச. சுஜாதா, சேகர் பதிப்பகம், சென்னை, விலை 180ரூ. கன்னியாகுமரி மாவட்டத்தின் தமிழ் வழக்கு , மொழிச்சுழல், கிறிஸ்தவ நாடார் வட்டார வழக்கின் இயல்புகள் ஆகிய தலைப்புகளில் நூலாசிரியர் ஆராய்ச்சி செய்த தகவல்கள் அடங்கிய நூல். வட்டார வழக்கியல் ஆய்வுக்கு மட்டும் அல்லது மொழி ஆய்வுக்கும் மொழியியல் ஆய்வுக்கும் இந்த நூல் பெரிதும் துணைபுரியும். நன்றி: தினத்தந்தி, 26/8/2015.
—-
பிரியாணி சமையல், கிழக்கு பதிப்பகம், விலை 100ரூ. 100 வகை வெஜிடெபிள் பிரியாணி வகைகள், 100 வகை அசைவ பிரியாணி வகைகள் என்ற இரண்டு புத்தகங்களை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. வெஜிடெபிள் பிரியாணி புத்தகத்தை எழுதியவர் தீபா சேகர். அசைவம் பிரியாணி புத்தகத்தை எழுதியவர் விஜயலட்சுமி சுத்தானந்தம். நன்றி: தினத்தந்தி, 26/8/2015.