சமூக சீர்திருத்த வரலாற்றில் பாரதியார்
சமூக சீர்திருத்த வரலாற்றில் பாரதியார், பூங்கொடி பதிப்பகம், விலை 140ரூ.
நாட்டுப்பற்று, இந்துமதப்பற்று, பொருளாதார ஏற்றத் தாழ்வு ஒழிப்பு ஆகிய பல கண்ணோட்டங்களில் பாரதியார் சமூக சீர்திருத்தத்தின் தேவைகளை வலியுறுத்தும் கருத்துக்களின் தொகுப்பு நூல். இந்தியாவில் விசேஷ கஷ்டங்கள் இரண்டு. 1. பணமில்லாதது, 2. சாதிக்குழப்பம். வறுமை எதிர்ப்புப் போராட்டமும், சாதி எதிர்ப்புப் போராட்டமும் இணைந்து நடந்தால்தான் சமத்துவம் ஏற்பட வழி பிறக்கும் என்றெல்லாம் பொருள் விரித்துக் கூறும் அளவிற்கு சூத்திரமாக அமைந்துள்ளது பாரதியாரின் இந்தக் கருத்து. சமூக சீர்திருத்தத்திற்காக பாரதியார் எழுப்பிய பல கருத்துக்களை தொகுத்தளித்திருக்கிறார் நூலாசிரியர் பெ. சு. மணி. நன்றி: தினத்தந்தி, 19/8/2015.
—-
உங்களுக்குள் உலகம், கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன், விலை 295ரூ. தமிழ்நாட்டுக்கு தனிப்பெருமை சேர்த்த தத்துவமேதை ஜெ. கிருண்ணமூர்த்தியின் கருத்துக்களெல்லாம் எக்காலத்துக்கும் பொருத்தமானவை. அவருடைய போதனைகளை 90 தலைப்புகளில் வடித்தெடுத்து உங்களுக்குள் உலகம் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆங்கில நூலை படித்தால் ஒவ்வொருவருடைய உள்ளத்தையும் ஊடுருவிச் செல்லும். நன்றி: தினத்தந்தி, 19/8/2015.