பொன்மொழிகள்

பொன்மொழிகள், தந்தை பெரியார், திராவிட கழக வெளியீடு, சென்னை, விலை 30ரூ.

தந்தை பெரியார் பொன்மொழிகள் பெரியார் ஈ.வே.ரா. பொன்மொழிகள் கொண்ட புத்தகம், 1949-ம் ஆண்டு திருச்சி திராவிடமணி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. அதை அன்றைய காங்கிரஸ் அரசு தடைசெய்தது. பின்னர் 1979-ல் பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அந்தத் தடையை அ.தி.மு.க. அரசு நீக்கியது. தடை நீக்கப்பட்ட புத்தகத்தை, இப்போது திராவிட கழகம் வெளியிட்டுள்ளது. அரசியல், மதம், கடவுள், சமுதாயம் இயக்கம், ஆட்சி, மொழி முதலான தலைப்புகளில் பொன்மொழிகள் தொகுத்து தரப்பட்டுள்ளன. சிந்தனைக்கு விருந்தளிக்கும் புத்தகம். நன்றி: தினத்தந்தி, 4/11/2015.  

—-

சொத்து வாங்குவோர் கவனத்திற்கு, நிஜம் வெளியீடு, சென்னை, விலை 60ரூ.

வீடு, நிலம் வாங்குவது என்றால், அதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சொத்து வாங்கும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்களை, தெளிவாக இந்நூலில் எழுதியுள்ளார் வழக்கறிஞர் எஸ். சேசாச்சலம். பயனுள்ள புத்தகம். நன்றி: தினத்தந்தி, 4/11/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *