வரலாற்றில் எம்.ஜி.ஆர்.
வரலாற்றில் எம்.ஜி.ஆர்., தொகுப்பு வெ. குமரவேல், முல்லை பதிப்பகம், சென்னை, விலை 500ரூ.
திரை உலகிலும், அரசியல் வானிலும் அசைக்க முடியாத இடத்தை பெற்றவர். கட்சி தொடங்கிய ஐந்து ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவரது பெருமைகள், சிறப்புகள் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், சினிமா இயக்குநர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகளை வெ. குமரவேல் தொகுத்து வழங்கியுள்ளார். ஏழைகளிடம் எம்.ஜி.ஆர். காட்டிய பரிவு, வீடு தேடி வந்தவர்களுக்கு அவர் அளித்த விருந்தோம்பல் பண்பு, தமிழர்களுக்கும், தமிழ் நாட்டுக்கும் அவர் ஆற்றிய அளப்பரிய நன்மைகளை இந்த நூலின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. புரட்சித் தலைவர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் பொது வாழ்க்கை பற்றிய புரிதலை இளைய தலைமுறையினருக்கு இந்த நூல் புரிய வைக்கும். நன்றி: தினத்தந்தி, 4/11/2015.
—-
தித்திப்பான திருப்புமுனைகள், புத்தொளிப் பதிப்பகம், சென்னை, விலை 80ரூ.
கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இஸ்லாம் மார்க்கத்தை தழுவியவர்கள் பலர். அவர்களில் பெரியார்தாசன், கமலாதாஸ், கிறிஸ்டியானி பேக்கர், லாரன் பூத், அஸ்லமி, கொடிக்கால் ஷேக் அப்துல்லா செல்லப்பா போன்ற 21 முக்கிய பிரமுகர்கள் இஸ்லாத்தைத் தழுவிய காரணங்களை அவர்கள் அளித்த பேட்டிகள் மூலம் இந்த நூலில் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா பதிவு செய்துள்ளார். இஸ்லாத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ள அவர்களைத் தூண்டிய நிகழ்வுகள் இந்த நூலில் அவர்கள் வார்த்தைகளிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 4/11/2015.