காலத்தை வென்ற கலாம்
காலத்தை வென்ற கலாம், செயின்ட் பிரிட்டோ கல்விக் குழுமம் வெளியீடு, சென்னை, விலை 70ரூ.
மறைந்த மாமனிதர் அப்துல் கலாம் பற்றி நிறைய புத்தகங்கள் வந்த வண்ணம் உள்ளன. சென்னை செயின்ட் பிரிட்டோ கல்விக்குழுமம், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மற்றும் பல கல்வி நிறுவனங்களில் அங்கம் வகிக்கும் டாக்டர் சா.சேவியர் அல்போன்ஸ் எழுதிய காலத்தை வென்ற கலாம் என்ற புத்தகம் குறிப்பிடத்தக்கதாகும். கலாம், திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்தவர். அந்த முறையில் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை பெற்றவர் டாக்டர் சா.சேவியர் அல்போன்ஸ். எனவே கலாம் பற்றிய புதிய தகவல்கள் பலவற்றை இந்த நூலில் எழுதியுள்ளார். கலாம் மாணவராக இருந்தபோது எடுத்த படங்கள், புத்தகத்துக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. இப்புத்தகம் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது. (விலை 70ரூ.) நன்றி: தினத்தந்தி, 4/11/2015.
—-
ஈஸி ஹிந்தி, எஸ். சிவகாம சுந்தரி, லியோ புக் பப்ளிஷர்ஸ், விலை 100ரூ.
தமிழ் மொழி மூலமாக இந்தியை எளிய முறையில் மிக விரைவாக கற்றுக்கொள்ள உதவும் வகையில் இந்தப் புத்தகம் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு பாடத்துடன் பயிற்சியும் அதற்கான விடையும் கொடுத்து இருப்பதால் யார் உதவியும் இல்லாமல் இந்தி மொழியை கற்றுக்கொள்ள இந்தப் புத்தகம் உதவியாக இருக்கும். நன்றி: தினத்தந்தி, 4/11/2015.