பேசாத பேச்செல்லாம்
பேசாத பேச்செல்லாம், பிரியா தம்பி, விகடன் பிரசுரம், சென்னை, விலை 170ரூ.
ஆண், பெண் வாழ்வில் ஒரு புரிதலை ஏற்படுத்த எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல். அக்கட்டுரைகளின் மூலம் தனது பால்ய காலம் தொட்டு தற்போது வாழும் வாழ்க்கை வரையிலான அனைத்து சம்பவங்களையும், தான் சந்தித்த மனிதர்களையும் படம் பிடித்து நம் முன்னே திரைப்படமாகக் காண்பிக்கிறார் நூலாசிரியர் பிரியா தம்பி. காப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ் ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று வாழ்க்கைகள் இருக்கின்றன. சொந்த வாழ்க்கை, பொது வாழ்க்கை, அந்தரங்க வாழ்க்கை என்று கூறுவார். ப்ரியாவின் கட்டுரைகள் இந்த மூன்று வாழ்க்கைக்குள்ளும் காற்ழுபோல இயல்பாகப் போய் வருகின்றன. எல்லாமே பேசியாச்சு என்பது போலவும் இன்னும் பேச எவ்வளவோ இருக்கு என்பது போலவும் ஒரே நேரத்தில் இருவித உணர்வுகளையும் தருகின்றது இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 4/11/2015.
—-
இல்லற ரகசியம், டாக்டர் டி. காமராஜ், கற்பகம் புத்தகாலயம், சென்னை, விலை 90ரூ.
தம்பதிகளிடையே ஏற்படும் பிணக்குகள் காரணமாக தவறான தொடர்புகளும், தாங்கமுடியாத வன்மங்களும் உருவாகின்றன. அவைகளை நீக்கி, இன்பமாக வாழ்வது எப்படி என்பதை டாக்டர் டி. காமராஜ் நன்றாக பதிவு செய்துள்ளார். எளிமையாக மருத்துவ ரீதியாக, உலக சுகாதார நிறுவனம் படிக்க வேண்டிய பாலியல் கல்வி நூல் இது. நன்றி: தினத்தந்தி, 4/11/2015.