தந்தை பெரியார் பிறந்தநாள் மலர்
தந்தை பெரியார் பிறந்தநாள் மலர், விடுதலை வெளியீடு, சென்னை, விலை 120ரூ.
தந்தை பெரியாரின் 136வது பிறந்த நாளையொட்டி விடுதலை வெளியிட்டுள்ள மலர், கண்ணையும் கருத்தையும் கவர்வதாக அமைந்துள்ளது. மறைந்த பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, கி. வீரமணி, பேராசிரியர் க. அன்பழகன், திராவிடர் கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உள்பட பல தலைவர்கள், பிரமுகர்களின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. வண்ணப்படங்களும் நிறைந்துள்ளன. நன்றி: தினத்தந்தி, 16/9/2015.
—-
போட்டோஷாப் மற்றும் கோரல்டிரா செயல்முறை பயிற்சிகள், ஜெ. வீரநாதன், பாலாஜி கணிண வரைகலைப் பயிலகம் வெளியீடு, கோவை, விலை 125ரூ.
டிடிபி மென்பொருட்களும் மிகவும் முக்கியமானது போட்டோஷப் மற்றும் கோரல்டிரா ஆகும். இந்த துறையில் உள்ளவர்கள் மேலும் பல நுட்பங்களை தெரிந்துகொள்வதற்கு வசதியாக, ஆசிரியர் பல செய்முறை பயிற்சிகளை எளிய நடையில் தொகுத்து வழங்கியுள்ளார். அனைத்து விளக்கப்படங்களும் வண்ணக்காகிதத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சமாகும். நன்றி: தினத்தந்தி, 16/9/2015.