என் வாழ்வின் ஒளிவிளக்கு டாக்டர் எம். நடராஜன்

என் வாழ்வின் ஒளிவிளக்கு  டாக்டர் எம். நடராஜன், எம்.ஜே. மருத்துவமனை வெளியீடு, திண்டுக்கல் மாவட்டம், விலை 200ரூ.

எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் டாக்டர் எம். நடராஜன் எலும்பு முறிவு சிகிச்சையில் அகில இந்திய புகழ்பெற்று விளங்கியவர் டாக்டர் எம். நடராஜன். அதன் மூலம் தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர். அவருடைய வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளையும், அவருடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் என் வாழ்வின் ஒளிவிளக்கு டாக்டர் எம். நடராஜன் என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார் டாக்டர் எஸ். ஜீவராஜன். டாக்டர் எம். நடராஜனின் மகனான மயில்வாகனனும் புகழ்பெற்ற டாக்டர். பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர். டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தவர். அவரைப் பற்றிய முக்கிய தகவல்களையும் தெரிவிக்கிறார் டாக்டர் ஜீவராஜன். 3 சிறந்த டாக்டர்கள் பற்றி அறிய இந்நூல் உதவும். ஏராளமான வண்ணப்படங்கள் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 21/10/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *