தமிழர் நாடு
தமிழர் நாடு, கி.ஆ.பெ. விசுவநாதம், காவ்யா பதிப்பகம், விலை 1300ரூ.
“எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்று வாழ்நாள் முழுவதும் முழங்கி வந்தவர், “முத்தமிழ் காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம். நீதிக்கட்சியின் பெயரை 1944ல் “திராவிடர் கழகம்” என்று பெரியாரும், அண்ணாவும் மாற்றினார்கள். “தமிழ்நாடு என்பதை உயிர் மூச்சாகக்கொண்ட கி.ஆ.பெ. விசுவநாதம், “திராவிட நாடு” என்பதை ஏற்க மறுத்து, அரசியலில் இருந்து விலகினார். அதன்பின், 1947ம் ஆண்டில் “தமிழர் நாடு” மாத இதழை தொடங்கினார். அதிழ் தமிழ் உணர்ச்சியைத் தூண்டும் தலையங்கங்களையும், கட்டுரைகளையும் எழுதினார். அவற்றை தொகுத்து 1,308 பக்கங்கள் கொண்ட பெரு நூலாக இப்போது வெளியிட்டு இருக்கிறார்கள். இதை ஒரு ‘தமிழ்க் களஞ்சியம்’ என்றே கூறலாம். இந்த அரியப் பணியை சிறப்பாக செய்திருப்பவர் முத்தமிழ்க் காவலரின் பேரர் பேராசிரியர் கோ.வீரமணி. இந்தப் புத்தகத்தின் மூலம் கி.ஆ.பெ. விசுவநாதம் தமிழர் இல்லங்களிலும், உள்ளங்களிலும் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பார். நன்றி: தினத்தந்தி, 25/11/2015.
—-
இதோ இன்னொரு மோகினி, சபரீஷ் பாரதி, விலை 160ரூ.
கோட்டயம் புஷ்பநாத் படைத்த ‘இதோ இன்னொரு மோகினி’ என்ற மாந்திரீக நாவலும், ஆசியாவில் டிராகுலா என்ற திகில் கதையும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. கோட்டம் புஷ்பநாத்தின் அட்சய பாத்திரக் கற்பனையின் ஊற்றுத்தான் எது என்று வியப்பையும் வகையில் கதைகள் அமைந்துள்ளன. வியப்பை ஏற்படுத்தும் களமும், அதில் அவர் கதையை நடத்திச் செல்லும் பாங்கும் வாசகர் மனத்தைக் கவரும். மலையாளத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் சிவன். நன்றி: தினத்தந்தி, 25/11/2015.