மதுவிலக்கு அரசியலும் வரலாறு

மதுவிலக்கு அரசியலும் வரலாறு, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 150ரூ.

தமிழ்நாட்டில், 1973ம் ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி மதுவிலக்கை அமலுக்கு கொண்டு வந்தார். அன்றைய முதல் அமைச்சர் ராஜாஜி. முதல் கட்டமாக, தனது சொந்த மாவட்டமான சேலத்தில் மதுவிலக்கை அமல் நடத்தினார். பின்னர் 1948 அக்டோபர் 2ந்தேதியன்று, தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கை அமலுக்கு கொண்டு வந்தார், அன்றைய முதல் அமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். 1967 தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. அண்ணா முதல்-அமைச்சராக இருந்தபோது, மதுவிலக்கை தொடர்ந்து அமலாக்குவதில் உறுதியோடு இருந்தார். பின்னர் முதல் அமைச்சராக வந்த கருணாநிதி, மதுவிலக்கை அமல் நடத்துவதால் ஏற்படும் நிதி இழப்பை ஈடு செய்ய மத்திய அரசு மறுத்ததால், மதுவிலக்கை தளர்த்த முடிவு செய்தார். அதன்பின் இன்றுவரை, மதுவிலக்குக் கொள்கையில் பற்பல மாற்றங்கள் வந்துள்ளன. அதை விரிவாக, விறுவிறுப்பான நடையில் எழுதியுள்ளார் ஆர். முத்துக்குமார். பூரண மதுவிலக்கைக் கொண்டு வரவேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கும் இத்தருணத்தில் இப்புத்தகம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. நன்றி: தினத்தந்தி, 25/11/2015.  

—-

வாழ்வை உயர்த்தும் வைர வரிகள், குமரன் பதிப்பகம், விலை 90ரூ.

பிறருடைய உள்ளத்தை வெல்ல வேண்டுமா? அதற்கு ஒரே வழி பேசும் வார்த்தைகள் இதயத்தில் இருந்து வரவேண்டும். இனிய வார்த்தைகளே இதய வாசல்களைத் திறக்கும் திறவுகோலாகும். அந்த வகையில் உலகில் பிரபலமானவர்கள் உதிர்த்த வார்த்தைகளைக் கொண்டு வாழ்க்கையை உயர்த்த முடியும் என்பதை இந்த நூலில் பேராசிரியர் க. ராமச்சந்திரன் சுவைபடச் சொல்கிறார். இனிய நடையால் நம் இதயங்களை வெல்கிறார். நன்றி: தினத்தந்தி, 25/11/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *