முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!
முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!, நா. முத்துநிலவன், அகரம் வெளியீடு, பக். 159, விலை 120ரூ.
To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023754.html பத்திரிகைகள், வலைதளங்களில் தற்போதைய கல்விமுறை பற்றி நூலாசிரியர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. விளையாடினால் தண்டிக்கும் பள்ளிகளையும், மதிப்பெண் எடுக்கும் இயந்திரமாக மாணவர்களை உருவாக்கும் பள்ளிகளையும் சுட்டிக்காட்டுகிறார் நூலாசிரியர். (பக். 77). ‘மதிப்பெண்களைத் துரத்துவது எப்படி என, சொல்லித் தருகின்றனரே தவிர, மனிதர்களைப் படிக்க யாரும் சொல்லித் தருவதில்லை. நாளைய மன்னர்களாகிய மாணவர்கள், வாழ்க்கையைத் துவங்கும் முன்பே தோற்றுவிட்டதாக எண்ணி தற்கொலை செய்து கொள்வது ஏன்? சுவையாக இருக்க வேண்டிய கல்வி கசப்பதுதான் காரணம். இப்படி இருந்தால், பள்ளி செல்லும்போது குழந்தைகள் அழாமல் என்ன செய்யும்’ என, சாடுகிறார். ‘முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே. சாதாரணமான மதிப்பெண்களோடும், அசாதாரணமான புரிதல்களோடும் கல்லூரிப் படிப்பை முடித்து வா’ என, தன் மகளுக்கு முற்போக்கான கடிதம் ஒன்றை எழுதுகிறார் (பக். 58). நாளை பள்ளி விடுமுறை என்றால், மாணவர் எழுப்பும் மகிழ்ச்சிக் குரல்கூட ஒருவகையில், கல்வி முறை மீதான மாணவர் விமர்சனம் தானே? -மனோ ரெட். நன்றி: தினமலர், 31/1/2016.