வ.உ.சி. வாலேஸ்வரன்
வ.உ.சி. வாலேஸ்வரன், செ.திவான், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், சென்னை, விலை 100ரூ.
“கப்பலோட்டிய தமிழன்” வ.உ.சிதம்பரனாரின் மகன் பெயர் வாலேஸ்வரன். அவரைப் பற்றிய புத்தகம் இது. இவருக்கு வாலேஸ்வரன் என்ற பெயர் வந்தது எப்படித் தெரியுமா? சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்ட வ.உ.சிதம்பரனாருக்கு வெள்ளையர் ஆட்சி “இரட்டை ஆயுள் தண்டனை” விதித்தது. அத்துடன் அவர் பெற்ற வக்கீல் பட்டத்தை ரத்து செய்து, கோர்ட்டில் வழக்காட முடியாதபடி தடை விதித்தது. விடுதலையடைந்தபின், வ.உ.சி. வறுமையில் வாடினார். கோர்ட்டிற்கு சென்று வக்கீலாக வாதாடவும் முடியவில்லை. வெள்ளையர்களில் சில நல்லவர்களும் இருந்தார்கள். அவர்களில் வாலேஸ் என்ற நீதிபதியும் ஒருவர். அவர்தான், வ.உ.சி.க்கு மீண்டும் நீதிமன்றத்துக்குச் சென்று வாதாடும் உரிமையை வாங்கித் தந்தார். அவர் நினைவாக தன் கடைசி மகனுக்கு ‘வாலேஸ்வரன்’ என்று பெயர் சூட்டினார் வ.உ.சி. இப்படி பல அபூர்வ தகல்களை இப்புத்தகத்தில் எழுதியுள்ளார் வரலாற்று அறிஞர் செ. திவான். இதுவரை பார்த்திராத வ.உ.சி.யின் பல படங்கள் இடம் பெற்று இருப்பது, புத்தகத்துக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. நன்றி: தினத்தந்தி, 24/2/2016.
—-
கடல் கொண்ட லெமுரியா, பணகுடி வி.பி. ராமராஜ், விலை 140ரூ.
கடல் கொண்ட லெமுரியா (குமரிக்கண்டம்) பற்றிய தகவல்களை கூறும் நூல். வரலாற்று ஆய்வாளர்கள் பணகுடி வி.பி. ராமராஜ், தன் ஆராய்ச்சி மூலம் கண்டறிந்த விவரங்களை விரிவாக எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 24/2/2016.