பிராஜக்ட்
பிராஜக்ட், ஜீவா புத்தக நிலையம், விலை 200ரூ.
மர்ம நாவல் என்ற குறிப்புடன் இந்த நூல் வெளிவந்துள்ளது. நாவலை எழுதியவர் பெயர் கவா கம்ஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபற்றி, அணிந்துரையில் “திருக்குறள் பாராயணம்” அமைப்பின் தலைவர் புதேரி தானப்பன் கூறுகிறார்- “இந்த நூலின் ஆசிரியர் ‘கவாகம்ஸ்’ ஸா? இப்படியும் ஒரு பெயரா? இவர் ஆணா, பெண்ணா? நாவல் முழுவதும் ஆங்கிலச் சொற்கள் நிரம்பி வழிகின்றன…” இவ்வாறு தானப்பன் கூறினாலும் நாவல் சிறப்பானது என்று பாராட்டவும் செய்திருக்கிறார். என்ஜீனியர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, முழு நேர எழுத்துப் பணியில் ஈடுபட்டுள்ள கலைவாணி (சுவா கம்ஸ்), எழுத்தாற்றல் கொண்டவர் என்பதற்கு இந்த நாவலே சான்று. நன்றி: தினத்தந்தி, 20/1/2016.
—-
திருவருட்பாச் சிந்தனை, க,வெள்ளை வாரணனார், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை 165ரூ.
இச்சிந்தனை நூல், கடவுள் ஒருவரே என்பது முதலாக திருமுறையும் திருவருட்பாவும் என்பது ஈறாகப் பகுதி கொண்டது. வள்ளலாரின் ஓதா உணர்வு, பன்னூற் புலமை, யாப்பு வளம், உரைநடைத் திறம், விண்ணப்பநடை, இசைப்பாடல்கள், தெய்வக் காதல், திருமுறைப் பதிவு, இலக்கியச் செல்வாக்கு எல்லாம் பன்னூற் சான்றுகளோடு ஒப்புமைப்படுத்தி எளிமையான நடையில் விளக்கம் அளிக்கப்பெற்றுள்ளது. நன்றி: தினத்தந்தி, 12/2/2016.