குமரி கண்டமா? சுமேரியமா?
குமரிகண்டமா? சுமேரியமா?, பா. பிரபாகரன், கிழக்கு பதிப்பகம், விலை 150ரூ.
தமிழகத்தை நிர்மாணித்த சுமேரியர்கள்! To buy this Tamil book online: http://www.nhm.in/shop/9788184937909.html பா. பிரபாகரன் எழுதிய ‘குமரி கண்டமா? சுமேரியமா?’ என்ற நூலை சமீபத்தில் படித்தேன். கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கோவையில், 2010ல் நடந்த செம்மொழி மாநாட்டில், இது தொடர்பாக அவர் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையின் நீட்சியாக இந்நூல் அமைந்துள்ளது. தமிழர்கள் எழுதிய நூல்கள் மிகக் குறைவுதான் என, சமஸ்கிருதத்தை ஒப்பிட்டு சில தகவல்களை சொல்கின்றனர். ஆனால், தமிழர்கள் அதிகளவில் நூல்களை எழுதினார். இயற்கை சீற்றம் அவற்றை விழுங்கி இருக்கலாம் என, நூல் துவங்குகிறது. தமிழகம், ஆதி காலத்தில் என்னவாக இருந்தது என்பதில் பல்வேறு தகவல்கள் உள்ளன. லெமூரியா என ஒரு தரப்பும், சுமேரியா என, பிற தரப்புகளும் கூறுகின்றன. லெமூரியாவாக இல்லை. சுமேரியாவாக இருக்கவே வாய்ப்புகள் உள்ளன என, பல்வேறு ஆதாரங்களை நூலாசிரியர் முன் வைக்கிறார். ஆப்ரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் நடுவே இருந்த பகுதி லெமூரியா. இங்கு வாழ்ந்த லெமோர் என்ற விலங்கை ஒத்த ஒரு விலங்கு, தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் இருந்தது. அதன் எச்சங்களை கொண்டு சில ஆதாரங்களையும் தருகின்றனர். ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை. ஆனால், ஈராக் பகுதியில் இருந்த மெசபடோமியா நாகரிகத்தைச் சேர்ந்த சுமேரியர்கள்தான், தமிழகத்தை நிர்மாணித்து இருக்கலாம் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. அங்கிருக்கும் ‘எரிது’ என்ற நகரத்தின் சாயல்தான் தமிழகத்தின் மதுரை. ‘வேல் தானுஸ்’ என்ற கடவுள்தான், இங்குள்ள முருகன். சுமேரியர்கள் வழிப்பட்ட ‘ஜியுஸ்’ கடவுளின் வாகனம் எருது. அதைப் போற்றும் வகையில், எருது விளையாட்டு அங்கே வழக்கமானது. அந்த வழிவந்ததுதான், ஜல்லிக்கட்டு என, சுமேரியர்களுக்கும், தமிழர்களுக்குமான ஒற்றுமைகளை, நூல் ஆசிரியர் பட்டியலிடுகிறார். தொல்லியல் துறை நடத்திய அகழ்வாராய்ச்சி சான்றுகளையும் ஆதாரமாகச் சொல்கிறார். ஒவ்வொரு நாட்டின் வரலாறு, அது தோன்றிய விதம் குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அந்த வரிசையில் இந்நூலும் இடம் பிடிக்கிறது. -கண்ணன் ராமசாமி. நன்றி: தினமலர், 13/3/2016.