சங்க காலத்து தமிழ் நாணயங்கள்
சங்க காலத்து தமிழ் நாணயங்கள், இரா. கிருஷ்ணமூர்த்தி, விலை 400ரூ.
‘தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள சங்ககால தமிழ் நாணயங்கள் மற்றும் பழங்கால வெளிநாட்டு நாணயங்கள்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆங்கிலநூலை, நாணவியல் ஆராய்ச்சியில் முத்திரை பதித்துள்ள தினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி எழுதி உள்ளார்.
இந்த நூலை படித்தால் பழங்கால நாணயங்கள் மட்டும் அல்லாமல் பண்டைய காலங்களிலும் நாணய புழக்கத்தை கையாண்டு உள்ள தமிழர்களின் பெருமையை நன்கு அறிய முடிகிறது.
அபூர்வமான நாணயங்களின் படங்களும் இடம் பெற்றிருப்பது நூலுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. ஆராய்ச்சியாளர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரும் படித்து பயன்பெற வேண்டிய நூல்.
நன்றி: தினத்தந்தி, 13/4/2016.