டாக்டர் ஜே.சி. குமரப்பாவின் கருத்துக்களஞ்சியம்
டாக்டர் ஜே.சி. குமரப்பாவின் கருத்துக்களஞ்சியம், டாக்டர் மா.பா. குருசாமி, சர்வோதய இலக்கியப் பண்ணை, விலை 300ரூ.
அகில இந்திய கதர் மற்றும் கிராமத் தொழில் நிறுவனத்தை மகாத்மா காந்தியடிகள் நிறுவி அதற்குசெயலாளராக டாக்டர் ஜே.சி. குமரப்பாவை நியமித்தார்.
தமிழகத்தில் பிறந்த இவர், நாட்டுக்காக உழைத்த அறிஞர்களில் ஒருவர். காந்திய பொருளியலுக்கு உருவமும், உள்ளடக்கமும் கொடுத்தவர். அவருக்கு ‘கிராமக் கைத்தொழிலின் டாக்டர்’ என்று காந்தியடிகளே பட்டம் அளித்தார்.
உலகம் முழுவதும் புவி வெப்பமடைதலைக் குறைத்து பருவ நிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற அவசர நிலை இப்போது நிலவுகிறது. இந்த நிலையில் ஜே.சி. குமரப்பாவின் கருத்துகளுக்கு ஒரு வரவேற்பு ஏற்பட்டிருக்கின்றது. அதன் அடிப்படையில் குமரப்பாவின் வாழ்க்கை, அவருடைய அடிப்படை பொருளாதாரக் கருத்துகள், அரசியல், சமூகப்பிரச்சினைகள் பற்றி ஒரு முழுமையான பார்வை கொண்ட இந்த நூலை டாக்டர் மா.பா.குருசாமி படைத்துள்ளார். இன்றைய காலத்தின் தேவையப் பூர்த்தி செய்யக்கூடிய அற்புதமான கருத்தோவியம் இந்த நூல்.
நன்றி: தினத்தந்தி, 13/4/2016.