நடிகைகளின் கதை
நடிகைகளின் கதை, யுவகிருஷ்ணா, சூரியன் பதிப்பகம், விலை 150ரூ.
சில நடிகைகளின் சொந்த வாழ்க்கை அவர்கள் நடித்த படங்களைவிட வியப்பும், திகைப்பும் நிறைந்தவையாக இருக்கும். உதாரணமாக, “சிவந்த மண்” காஞ்சனா, பல படங்களில் நடித்து சிறைய சம்பாதித்தார். அதையெல்லாம் அவருடைய அப்பாவே அபகரித்துக்கொண்டார்.
சட்டத்தின் துணையுடன் போராடி, ரூ.15கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்டார். அதை அப்படியே திருப்பதி கோவிலுக்கு எழுதி வைத்துவிட்டு, பெங்களூரு புறநகரில் சிறிய வாடகை வீட்டில் வசித்தார். கன்னட திரை உலகின் கனவு கன்னியாகத் திகழ்ந்த கல்பனா, யாரும் எதிர்பாராத விதமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீவித்யா, கேரளாவில் குடியேறி மலையாளப் படங்களில் நடித்து புகழ் பெற்றார். அவர் இறந்தபோது, கேரள அரசாங்கம் துப்பாக்கி குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் அவர் உடலை அடக்கம் செய்தது. இப்படி பல நடிகைகளின் வாழ்க்கையை விவரிக்கிறது இந்த புத்தகம்.
நன்றி: தினத்தந்தி, 27/4/2016.