விக்கிரமாதித்தன் கதைகள்
விக்கிரமாதித்தன் கதைகள், ப்ரியா பாலு, கண்ணப்பன் பதிப்பகம், விலை 400ரூ.
விக்கிரமாதித்தன் கதைகளில் மிகவும் பிரசித்தி பெற்றது வேதாளமும், விக்கிரமாதித்தனும் பங்கு கொண்ட கதைகளாகும். மன்னன் எப்படி நீதி செலுத்த வேண்டும்? மக்களை எப்படிக் காக்க வேண்டும் என்ற கருத்துகளை விக்கிரமாதித்தன் கதைகள் எடுத்துச் சொல்கின்றன. மேலும் வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்குகின்றன. நன்னெறிகளை கதாபாத்திரங்கள் மூலம் எடுத்துரைக்கின்றன. இந்தக் கதைகள் மந்திரங்கள், தந்திரங்கள், மாயாஜாலங்கள் நிறைந்தவை. அத்தகைய கதைகளை எழுத்தாளர் ப்ரியா பாலு குழந்தைகளுக்கு புரியும் வகையில் எளிமையாகவும், சுவையாகவும் எழுதியுள்ளார்.
நன்றி: தினத்தந்தி, 27/4/2016.
—–
உலகத் திரைப்படம், கண்ணதாசன் பதிப்பகம், விலை 225ரூ.
ஆக்கப்பூர்வமான திரைப்படங்கள் உயர்ந்த இலக்கியங்கள் என்ற அளவில் போற்றப்பட வேண்டியவை. அந்த வகையில் உலகம் முழுவதும் வெளியான திரைப்படங்கள் மற்றும் இயக்குனர்கள் குறித்தும், அவர்களது படைப்புகள் பற்றியும் ஆய்வு நோக்கோடு டாக்டர் வெ.சுப்பிரமணிய பாரதி அலசி ஆராந்துள்ளார். விசித்திரமான கதாபாத்திரங்கள், உரையாடல்கள், அதிர்ச்சிகரமான காட்சி மாற்றங்கள் என ஒரு வித்தியாசமான கோணத்தில் உலக சினிமாவை மக்கள் மத்தியில் உலவ விடுகிறார்.
நன்றி: தினத்தந்தி, 27/4/2016.