சிந்தனைக் கீற்றுகள்
சிந்தனைக் கீற்றுகள், கா. வேழவேந்தன், மணிவாசகர் பதிப்பகம், விலை 100ரூ.
மாணவப் பருவம் முதல் கவிதைகள் எழுதி வருபவர் கா. வேழவேந்தன். தமிழ் இலக்கியப் பூங்காவில், புதுக்கவிதை என்ற சூறாவளி வீசியபோதும், இவருடைய மரபுக் கவிதைகள் தென்றலாய்த் தவழ்ந்தன. அதனால் ‘கவிவேந்தர்’ என்று போற்றப்பட்டார்.
அமைச்சர் பதவி வகித்தபோதும், இவருடைய கவிதைத் தொண்டு தொய்வில்லாமல் தொடர்ந்தது. “சிந்தனைக் கீற்றுகள்” என்ற இந்த நூல் அவருடைய சிந்தனைச் சிறப்புக்கும், கவிதைப் புலமைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
மொத்தம் 147 கவிதைகள் உள்ள இந்த நூலில், முதல் 42 கவிதைகள் தமிழின் சிறப்பையும், தமிழ்நாட்டின் பெருமையையும் மற்றும் பல்வேறு பொருட்கள் பற்றியும் சுவைபட எடுத்துக் கூறுகின்றன. பிற்பகுதியில் உள்ள கவிதைகளில் பெரும்பாலானவை தமிழ்ச் சான்றோர்களின் தொண்டினைப் போற்றுகின்றன.
மொத்தத்தில், தமிழ் அன்னைக்கு கவிவேந்தர் சூட்டியுள்ள வாடாமல் இந்த “சிந்தனைக் கீற்றுகள்”.
நன்றி: தினத்தந்தி, 22/6/2016.