பெரியார் மறைந்தார் பெரியார் வாழ்க
பெரியார் மறைந்தார் பெரியார் வாழ்க, கி. வீரமணி, திராவிடர் கழக வெளியீடு, விலை 210ரூ.
பெரியார் பற்றிய சிறந்த நூல்
பெரியார் மறைவு பற்றி பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகளை சேகரித்து, “பெரியார் மறைந்தார். பெரியார் வாழ்க” என்ற தலைப்பில், திராவிட கழக தலைவர் கி.வீரமணி ஒரு நூலை தொகுத்துள்ளார். பெரியார் மறைவு பற்றி மட்டுமல்ல. அதற்கு முன் நடந்த பல முக்கிய நிகழ்ச்சிகள் பற்றியும் இந்த நூலில் பல அபூர்வத் தகவல்கள் அடங்கியுள்ளன.
பெரியாரின் பொன்மொழிகளும், கட்டுரைகளும் நல்விருந்தாக அமைந்துள்ளன. “எனது நிலை” என்ற தலைப்பில் அவர் எழுதிய சிறு கட்டுரையின் சில பகுதிகள் வருமாறு :-
“எனக்கு வயது 90. உடல் நிலை மிகவும் மோசம். தூக்கம் சரியாக வருவது இல்லை. களைப்பு அடிக்கடி ஏற்படுகிறது. எதைப்பற்றியும் சலிப்பும், வெறுப்பும் ஏற்பட்டுவிடுகிறது. சுருக்கமாக சொல்வதானால் வாழ்வே வெறுப்பாக இருக்கிறது. என்றாலும், தற்கொலை செய்து கொள்ளமாட்டேன்.” மேற்கண்டவாறு பெரியார் ஏன் எழுதினார் என்றால், கூட்டங்களுக்கு அதிகம் அழைக்காதீர்கள் என்று திராவிட கழகத்தினரை கேட்டுக்கொள்வதற்காகத்தான்!
நூலை மிகச் சிறப்பான முறையில் தொகுத்துத் தந்துள்ளார் கி. வீரமணி.
நன்றி: தினத்தந்தி, 22/6/2016.