நபிமொழிக் களஞ்சியம்
நபிமொழிக் களஞ்சியம், மவுலவி எம். அப்துல் ரஹ்மான் பாகவி, மின்னத் பப்ளிஷர்ஸ், விலை 500ரூ.
இஸ்லாமிய நெறிமுறையில் திருக்குர் ஆனுக்கு அடுத்தபடியாக நபிகளாரின் பொன்மொழித் தொகுப்பாகிய ‘ஹதீஸ்’கள் மதிக்கப்படுகின்றன. ஹதீஸ் என்றால் உரை, உரையாடல், புதிய செய்தி எனப்பொருள்படும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளில் 2 ஆயிரம் ‘ஹதீஸ்’களைத் தேர்ந்தொடுத்து, இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் ‘ரியாளுஸ் ஸாலிஹீன்’ என்ற நூலை அரபி மொழியில் எழுதினார். அதை ‘நபிமொழி களஞ்சியம்’ என்ற பெயரில் மவுலவி எம். அப்துல் ரஹ்மான் பாகவி மொழிபெயர்த்தார். அது ஏற்கனவே நான்கு பாகங்களாக வெளியாயின.
இப்போது அந்த நான்கு பாகங்களையும் அழகிய முறையில் இணைத்து ஒரே பாகமாக – ஒரே தொகுப்பாக வெளியிட்டுள்ளனர். அனைவரும் படித்து புரிந்து கெள்ளும் வகையில் இனிய எளிய நடையில், நபிகளாரின் பொன் மொழிகளை நம் இதயம் தொடும் வகையில் எழுதியுள்ளார். முஸ்லிம்கள் இல்லங்களில் அவசியம் இருக்க வேண்டிய நூல்.
நன்றி: தினத்தந்தி, 22/6/2016.