அய்யாவின் அடிச்சுவட்டில்

அய்யாவின் அடிச்சுவட்டில்,கி.வீரமணி, திராவிடர் கழக வெளியீடு, விலை 250ரூ. தந்தை பெரியாரின் இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு 75 ஆண்டுகளாக தொடர்ந்து சமூகப் பணியாற்றி வரும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பெரியாருடன் இணைந்து ஆற்றிய இயக்கப் பணிகள் குறித்து ஏற்கனவே எழுதிய 224 கட்டுரைகள், 5 பாகங்களாக வெளியாகி உள்ள நிலையில், மேலும் 41 கட்டுரைகளுடன் இந்த ஆறாவது தொகுதி வெளியாகி உள்ளது. ஆங்கில நாளேட்டை தமிழர் தொடங்க வேண்டும் என்று தந்தை பெரியார் விரும்பியது, தஞ்சையில் வரலாற்றுச் சாதனையாக மகளிர் பாலிடெக்னிக் […]

Read more

இராமாயணம் இராமன் இராமராஜ்யம்

இராமாயணம் இராமன் இராமராஜ்யம், கி.வீரமணி, திராவிடர் கழக வெளியீடு, விலை நன்னொடை 120ரூ. சில மாதங்களுக்கு முன்பு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சென்னை பெரியார் திடலில், 7 நாட்களாக ஆற்றிய உரைகளின் தொகுப்பாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் சாதி பாகுபாட்டை வலியுறுத்தும் வருணாசிரமத்தை நீடிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகவும், மத வெறியை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் ராமாயண பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது என்பதை பல ஆதாரங்களுடன் அவர் எடுத்து வைக்கிறார். பல்வேறு மொழிகளில் ராமாயணம் 48 நூல்களாக வெளியாகி இருக்கிறது […]

Read more

பெரியார் ஒளிமுத்துக்கள்

பெரியார் ஒளிமுத்துக்கள், திராவிடர் கழக வெளியீடு, விலை 70ரூ. தந்தை பெரியாரின் பொன்மொழிகள் கொண்ட புத்தகம். சுயமரியாதை, பொதுத்தொண்டு, சமுதாயச் சீர்திருத்தம், இலக்கியம், திருக்குறள், பொருளாதாரம் முதலிய தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 15/2/2017.   —-   பொது அறிவுப்பூங்கா, ஸ்ரீ ரங்கம் காயத்ரி, காய்த்ரி பப்ளிகேஷன்ஸ், விலை 70ரூ. பொது அறிவு சம்பந்தமான 1000 கேள்வி – பதில்கள் கொண்ட புத்தகம். நன்றி: தினத்தந்தி, 15/2/2017.

Read more

உலகத் தலைவர் பெரியார்

உலகத் தலைவர் பெரியார், கி. வீரமணி, திராவிடர் கழக வெளியீடு, விலை 250ரூ. மறைந்த தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை திராவிட கழகத்தலைவர் கி. வீரமணி புத்தகங்களாக எழுதி வருகிறார். ஏற்கனவே மூன்று பாகங்கள் வெளிவந்துவிட்டன. இப்போது நான்காம் பாகம் வெளிவந்துள்ளது. இதில், 1952ம் ஆண்டு நடந்த முதல் பொதுத்தேர்தல் பற்றிய முக்கிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாடும், ஆந்திராவும் இணைந்த “சென்னை மாகாணம்” அப்போது இருந்தது. மொத்தம் 371 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 152 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. எதிர்க்கட்சிகள் “ஐக்கிய […]

Read more

கல்லூரி பல்கலைக்கழகங்களில் தமிழர் தலைவர்

கல்லூரி பல்கலைக்கழகங்களில் தமிழர் தலைவர், கி. வீரமணி, திராவிடர் கழக வெளியீடு, விலை 350ரூ. திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி நாடறிந்த தலைவர். நல்ல பேச்சாளர். சீரிய சிந்தனையாளர். டாக்டர் பட்டம் பெற்றவர். சிறந்த கல்வியாளர். அவரைத் தம் கல்வி நிறுவனங்களுக்கு அழைத்து மாணவர்களிடையே உரை நிகழ்த்தச் செய்ய அனைவரும் விரும்புகின்றனர். அவர்கள் அழைப்பை ஏற்று பல கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உரையாற்றியிருக்கின்றார். 25 கல்லூரிகளில் நிகழ்த்திய உரை இந்த நூலில் இடம்பெற்றுள்ளது. கல்லூரி அரங்கங்களில் மாணவர்கள் வினாதொடுப்பதும், கி.வீரமணி விடை நல்குவதும் அறிவார்ந்த […]

Read more

பெரியார் மறைந்தார் பெரியார் வாழ்க

பெரியார் மறைந்தார் பெரியார் வாழ்க, கி. வீரமணி, திராவிடர் கழக வெளியீடு, விலை 210ரூ. பெரியார் பற்றிய சிறந்த நூல் பெரியார் மறைவு பற்றி பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகளை சேகரித்து, “பெரியார் மறைந்தார். பெரியார் வாழ்க” என்ற தலைப்பில், திராவிட கழக தலைவர் கி.வீரமணி ஒரு நூலை தொகுத்துள்ளார். பெரியார் மறைவு பற்றி மட்டுமல்ல. அதற்கு முன் நடந்த பல முக்கிய நிகழ்ச்சிகள் பற்றியும் இந்த நூலில் பல அபூர்வத் தகவல்கள் அடங்கியுள்ளன. பெரியாரின் பொன்மொழிகளும், கட்டுரைகளும் நல்விருந்தாக அமைந்துள்ளன. “எனது நிலை” என்ற […]

Read more