உலகத் தலைவர் பெரியார்

உலகத் தலைவர் பெரியார், கி. வீரமணி, திராவிடர் கழக வெளியீடு, விலை 250ரூ.

மறைந்த தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை திராவிட கழகத்தலைவர் கி. வீரமணி புத்தகங்களாக எழுதி வருகிறார். ஏற்கனவே மூன்று பாகங்கள் வெளிவந்துவிட்டன. இப்போது நான்காம் பாகம் வெளிவந்துள்ளது.

இதில், 1952ம் ஆண்டு நடந்த முதல் பொதுத்தேர்தல் பற்றிய முக்கிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

தமிழ்நாடும், ஆந்திராவும் இணைந்த “சென்னை மாகாணம்” அப்போது இருந்தது. மொத்தம் 371 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 152 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. எதிர்க்கட்சிகள் “ஐக்கிய முன்னணி” அமைத்து, 223 இடங்களில் வெற்றி பெற்றன. அப்படி இருந்தும், காங்கிரஸ் மந்திரிசபை அமைக்கப்பட்டு ராஜாஜி முதல் மந்திரியானார். அதுபற்றிய முழு விவரிங்களையும் சுவைபட விவரித்துள்ளார் வீரமணி.

மற்றும், “சுயமரியாதை திருமணம் செல்லாது” என்று சென்னை ஐகோர்ட்டு 26/8/1953ல் தீர்ப்பு கூறியது, ராஜாஜி கொண்டு வந்த கல்வித்திட்டத்துக்கு கிளப்பிய எதிர்ப்பு, அதனால் அவர் பதவியை விட்டு விலகியது, ஜி.டி.நாயுடுதான் கண்டுபிடித்த விஞ்ஞான சாதனங்களுக்கு அரசாங்கம் ஆதரவு தராததால் அந்தப் பொருள்களை சம்மடியால் உடைத்து நொறுக்கியது முதலான முக்கிய நிகழ்ச்சிகளும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.

நன்றி: தினத்தந்தி, 4/1/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *