நினைவலைகளில் பாவேந்தர்
நினைவலைகளில் பாவேந்தர், கவிஞர் பொன்னடியார், வசந்தா பதிப்பகம், விலை 220ரூ.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பற்றி பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் தனிச்சிறப்பு வாய்ந்தது இந்த நூல். காரணம், இதை எழுதியவர் பாரதிதாசனின் பிரதான மாணவரும் புரட்சிக்கவிஞரின் இறுதிக்காலம் வரை அவரது நிழலாக இருந்தவருமான பொன்னடியார்.
பாரதிதாசனின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளை, உள்ளத்தைத் தொடுகிற விதத்தில் விவரித்துள்ளார். “பண்டியன் பரிசு” என்ற திரைப்படத்தைத் தயாரிப்பதற்கு பாவேந்தர் எடுத்துக்கொண்ட முயற்சிகள், அப்போது நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகள் ஆகியவை இந்நூலில் ஆதாரபூர்வமாக விளக்கப்பட்டுள்ளன.
1962-ம் ஆண்டில், இசையரசி எம்.எஸ்.சுப்பு லட்சுமிக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டம் நடந்தபோது, இசையரசிக்காக பாரதிதாசன் நடத்திய போர் மெய்சிலிர்க்க வைக்கிறது. தமிழ் உணர்ச்சியை தூண்டும் விதத்தில் புத்தகத்தை எழுதியுள்ளார் கவிஞர் பொன்னடியார்.
நன்றி: தினத்தந்தி, 4/1/2017.