இராமாயணம் இராமன் இராமராஜ்யம்
இராமாயணம் இராமன் இராமராஜ்யம், கி.வீரமணி, திராவிடர் கழக வெளியீடு, விலை நன்னொடை 120ரூ.
சில மாதங்களுக்கு முன்பு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சென்னை பெரியார் திடலில், 7 நாட்களாக ஆற்றிய உரைகளின் தொகுப்பாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் சாதி பாகுபாட்டை வலியுறுத்தும் வருணாசிரமத்தை நீடிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகவும், மத வெறியை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் ராமாயண பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது என்பதை பல ஆதாரங்களுடன் அவர் எடுத்து வைக்கிறார்.
பல்வேறு மொழிகளில் ராமாயணம் 48 நூல்களாக வெளியாகி இருக்கிறது என்பதையும் அவற்றை எழுதியவர்களின் பட்டியலையும் தந்து பிரமிக்க வைக்கிறார். பின் இணைப்பாக ராமாயணம் பற்றி தந்தை பெரியார் தெரிவித்த கருத்துக்கள் அனைவரும் படிக்க வேண்டியவை ஆகும்.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818