அய்யாவின் அடிச்சுவட்டில்
அய்யாவின் அடிச்சுவட்டில்,கி.வீரமணி, திராவிடர் கழக வெளியீடு, விலை 250ரூ.
தந்தை பெரியாரின் இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு 75 ஆண்டுகளாக தொடர்ந்து சமூகப் பணியாற்றி வரும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பெரியாருடன் இணைந்து ஆற்றிய இயக்கப் பணிகள் குறித்து ஏற்கனவே எழுதிய 224 கட்டுரைகள், 5 பாகங்களாக வெளியாகி உள்ள நிலையில், மேலும் 41 கட்டுரைகளுடன் இந்த ஆறாவது தொகுதி வெளியாகி உள்ளது.
ஆங்கில நாளேட்டை தமிழர் தொடங்க வேண்டும் என்று தந்தை பெரியார் விரும்பியது, தஞ்சையில் வரலாற்றுச் சாதனையாக மகளிர் பாலிடெக்னிக் தொடங்கப்பட்டது, கரூரில் நடைபெற்ற மனுதர்ம எதிர்ப்புப் போராட்டம், ஈழத் தமிழர்களான குட்டிமணி, ஜெகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட கண்டன கூட்டங்கள், பாரிஸ் நகரில் தந்தை பெரியாருக்குசிலை வைக்கப்பட்ட நிகழ்வு போன்ற பல வரலாற்றுச் சம்பவங்களை கி.வீரமணி அழகாக, சிறந்த நாட்குறிப்பு போல தொகுத்துத் தந்து இருக்கிறார்.
கி.வீரமணி ஆற்யி பணிகள், அரவது சொற்பொழிவுகள் போன்றவற்றை இந்த நூல் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029494.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818