இராஜ தந்திரி இராஜாஜி

இராஜ தந்திரி இராஜாஜி, செல்லப்பா, அனிதா பதிப்பகம், பக். 136, விலை 65ரூ.

சீர்திருத்தம், சமதர்மம், பகுத்தறிவு என்றெல்லாம் பலரும் மேடையில் பேசுவர். அவற்றைத் தம் வாழ்வில் கடைப்பிடிப்போர் மிகச் சிலரே ஆவர். அந்த மிகச் சிலரில் ராஜாஜியும் ஒருவர்.

மகாத்மா காந்தியடிகள் தம் வாரிசு என்று இவரையே சொன்னார். அத்தகைய பெரியவரின் வாழ்க்கை வரலாற்றின் சில பகுதிகளை இந்நுால் கூறுகிறது.
சிறுவயதில் ராஜாஜி கண் சரியாகத் தெரியாமல், கண்ணாடி கேட்டு தந்தையிடம் அடம் பிடித்ததும், முதல் வழக்கிலே வாதாடி இவர் வெற்றி பெற்றதும், தாழ்த்தப்பட்ட மாணவர்களை, 1906ம் ஆண்டு மாநகராட்சிக் கல்லுாரியில் சேர்ந்து படிக்கவும், வாதிட்டு வென்றார்.

காந்தியடிகள் தென் ஆப்ரிக்காவில் இருந்தபோதே, அவர் பெருமையைத் தம் மகள் நாமகிரிக்கு விளக்கிக் கூறியதும், 37ம் வயதில் மனைவியை இழந்த பின், தம் மக்களை வளர்க்கத் துன்பப்பட்டதும், தமிழக கதர் உற்பத்தியில் இவரின் கடுமையான உழைப்பும், பொது வாழ்வில் இவரது நேர்மையும் படிக்கப் படிக்க நம் இதயம் கனக்கிறது.
ஓர் துாய்மையான, ஒழுக்கத்தில் சிறந்தவரின் வரலாறு படித்த மனநிறைவு நமக்கு ஏற்படுகிறது.

நன்றி: தினமலர், 19/5/19.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *