இராஜ தந்திரி இராஜாஜி
இராஜ தந்திரி இராஜாஜி, செல்லப்பா, அனிதா பதிப்பகம், பக். 136, விலை 65ரூ. சீர்திருத்தம், சமதர்மம், பகுத்தறிவு என்றெல்லாம் பலரும் மேடையில் பேசுவர். அவற்றைத் தம் வாழ்வில் கடைப்பிடிப்போர் மிகச் சிலரே ஆவர். அந்த மிகச் சிலரில் ராஜாஜியும் ஒருவர். மகாத்மா காந்தியடிகள் தம் வாரிசு என்று இவரையே சொன்னார். அத்தகைய பெரியவரின் வாழ்க்கை வரலாற்றின் சில பகுதிகளை இந்நுால் கூறுகிறது. சிறுவயதில் ராஜாஜி கண் சரியாகத் தெரியாமல், கண்ணாடி கேட்டு தந்தையிடம் அடம் பிடித்ததும், முதல் வழக்கிலே வாதாடி இவர் வெற்றி பெற்றதும், […]
Read more