தீர்க்கதரிசி
தீர்க்கதரிசி, தமிழில் சிவசங்கரி, வானதி பதிப்பகம், விலை 800ரூ.
ஆந்திராவில் எளிய குடும்பத்தில் பிறந்து தமிழ்நாட்டில் குடியேறி உலக சாதனை புரிந்தவர் டாக்டர் பிரதாப் சந்திர ரெட்டி. ஒரு காலத்தில் அரசாங்க ஆஸ்பத்திரிகளும், நகரசபை ஆஸ்பத்திரிகளும்தான் இருந்தன.
இந்நிலையில் சர்வதேச தரத்துக்கு ஆஸ்பத்திரிகளை அமைத்தார், பிரதாப் சி.ரெட்டி. இன்று அவருடைய அப்போலோ ஆஸ்பத்திரிகள், உலகப்புகழ் பெற்று விளங்குகின்றன. வெளிநாட்டவர்களும் இங்கு வந்து சிகிச்சை பெறுகிறார்கள்.
அப்போலோ மருத்துவமனைகள் ஒவ்வொரு நாளும் 60,000 பரிசோதனைகளைச் செய்கின்றன. 3000 அவசர நிலை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றன. 2200 நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள். 700 சிறுநீரக டயாலிசிஸ் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. 40 இருதய அறுவை சிகிச்சைகள் உள்பட 800 முக்கிய அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.
வைத்தியத்துறையில் முடிசூடா மன்னராக விளங்கும் பிரதாப் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை பிரபல பத்திரிகையாளர் பிரணய் குப்தே, ஆங்கிலத்தில் பெருநூலாக எழுதினார். அது இப்போது தமிழில் “தீர்க்தரிசி” என்ற தலைப்பில் 840 பக்கங்கள் கொண்ட பெரிய புத்தகமாக வெளிவந்துள்ளது. தமிழில் அருமையாக மொழி பெயர்த்துள்ளவர் பிரபல எழுத்தாளரும், எழுத்துத் துறையில் பல சாதனைகளைச் செய்தவருமான சிவசங்கரி.
புத்தகத்தைப் படிக்கும்போது, விறுவிறுப்பான நாவலைப் படிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. புத்தகத்தின் வடிவமைப்பு, மேல்நாட்டுப் புத்தகங்களுக்கு இணையாக உள்ளது.
நன்றி: தினத்தந்தி, 22/6/2016.