உங்கள் வருங்காலத்தைச் செதுக்குங்கள்,
.
உங்கள் வருங்காலத்தைச் செதுக்குங்கள், டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம், கண்ணதாசன் பதிப்பகம், விலை 150ரூ.
“பெரும் இடையூறுகளைக் கடந்து என்னால் சாதிக்க முடிந்திருக்கிறது என்றால், அது போலவே யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம். இதுதான் இந்தப் புத்தகத்தின் வாயிலாக நான் சொல்ல விரும்பும் செய்தியாகும்” என்று குறிப்பிட்டுள்ளார் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம்.
கடந்த 10 ஆண்டுகளில் அப்துல் கலாமுக்கு இளைஞர்களிடமிருந்து வந்த கடிதங்கள், கேள்விகளை அடிப்படையாகக் கொண்டு இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. அதற்கான பதில்கள் எல்லாம் வாழ்வில் அவர் கற்றுக்கொண்ட சுய அனுபவங்கள் சார்ந்தவை.
இந்தப் புத்தகத்தை படிக்கும் வாசகர்களம் அதே விதமான பிரச்சினைகளையோ அல்லது சூழ்நிலைகளையோ எதிர்கொள்ள நேர்ந்திருக்கலாம். எனவே, எல்லாப் பிரிவினருக்கும் பொருந்தும் வகையில் பொதுப் பண்புகள் கெண்ட செய்திகளாக அமையும்படி இந்நூலை அமைத்திருக்கிறார் டாக்டர் அப்துல் கலாம்.
அவர் Forge Your Future என்று ஆங்கிலத்தில் படைத்ததை எளிய தமிழில் மொழி மாற்றம் செய்திருக்கிறார் சிவதர்ஷினி.
நன்றி: தினத்தந்தி, 20/7/2016.