அமரனின் கவிதாவெளி
அமரனின் கவிதாவெளி, ஓவியா பதிப்பகம், விலை 250ரூ.
இது கவிஞர் அமரனின் 400 ஹைக்கூ கவிதைகளின் அழகான தொகுப்பு. பக்கங்கள்தோறும் கவிதைகள் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக அத்துடன் ஆங்காங்கே வண்ணவண்ணப் படங்கள் விதவிதமாக, இயல்கருதி, இருப்பினும் இயல்பில் பின்றி, நம் சட்டைகளைப்போல, புத்தக அட்டைகளைப் போல. இவரது கவிதைகள் எளிய உயிர்களின் மீது அன்பையும் இயற்கை நட்பையும் சமூகச் சாடல்களையும் ஆழ்மன்த் தேடல்களையும் கொண்டிருக்கின்றன.
அலைகள் ஆர்ப்பரிப்பு
கையில் தேநீர் கோப்பையுடன்
அமைதியான நான்!
இதுதான் அமரன் – அமரத்துவம் பகலில் அலைகளின் முன்பும் இரவில் நட்சத்திரங்களின் கீழும் அடிக்கடி அமர்வதால்தான் அமரன் என்று பெயர் பெற்றாரோ என எண்ணத் தோன்றும் அமைதிதான் அமரன். ஆனால் நேரடிப் பேச்சில் அமைதியின்மையை எவராயினும் எளிதில் கண்டுகொள்ள இயலும்.
பஞ்சாங்கம் சொல்லுவது போன்று இயற்கைப் பிறதேசத்துக்குள்ளும் வாழ்வின் புதிர்களுக்குள்ளும் சமூகக் கொடுமைகளுக்கும் ஒரு சேரப் பயணித்துக் கவிதைகளைத் தேடி அடைகிறவராக அமரன் வெளிப்படுகிறார்.
நன்றி: காவ்யா, 2016.