தாரகை
தாரகை, தமிழ்மகன், உயிர்மை பதிப்பகம், விலை 170ரூ.
இந்நூல் சினிமா உலகத்தை கழுகுப் பார்வையில் பார்த்துப் பதிவு செய்கிறது. சினிமாவின் புல்லரிப்புகள், பரவசங்கள், பாசாங்குகள், பயங்காட்டல்கள், சவால்கள், சறுக்கல்கள், கலைவதற்காகவே அடுக்கப்படும் கனவுகள், பொறாமைகள், காய் நகர்த்துதல்கள், பகட்டுத்தனங்கள் என எல்லாவற்றையும் யதார்த்தமாகப் பதிவு செய்கிறார் நூலாசிரியர் தமிழ் மகன்.
ஒரு தேர்ந்த வில் வித்தைக்காரனின் அம்புகளைப்போல இவரது சொற்களும், சொற்களின் வழி விரிந்து செல்லும் கதை உலகமும் இந்த யதார்த்தத்துக்கு துணை புரிகின்றன.
தீபிகா என்ற நடிகை, திடீர் புகழ் பெற்று சிலரை அனுசரித்து, சிலரை பகைத்து,,, யாரையோ அவசர அவசரமாக மணந்து பிரிந்து அரசியல் தலைவியாகிறாள். யோசித்துப் பார்த்தால் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த பல நடிகைகளுக்கும் இது பொருந்தும்,
மொத்தத்தில் கற்பனைச் சரடும் நிஜச் சரடுமாய் பின்னிப் பிணைந்து உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த நாவல்.
நன்றி: தினத்தந்தி, 7.9.2016.