நா. முத்துகுமார் கவிதைகள்
நா. முத்துகுமார் கவிதைகள், பட்டாம்பூச்சி பதிப்பகம், விலை 225ரூ.
கவிதையின் அனுபவ உலகத்தை அகம், புறம் என இரண்டாகப் பிரிக்கும் கோடு அத்தனை தெளிவானதல்ல. சமுத்திரமும் நிலமும் சந்திக்கும் கரை போன்றது அது. எளிய கருத்தாக்கங்களுடன் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. வன்மமோ, புரியாத புதிரோ, புத்தகத்தை மூடிவிட்டு பொருள் தேடிப் புறப்படும் பயணமோ வேண்டியதில்லை.
சித்திரம், சித்திரமாய் எழுதிப் போகிறார் நா. முத்துக்குமார். அருமையான நீரோட்டம் மாதிரி படிக்கும்போதே தெளிந்து உணரக்கூடியவை. அடர்த்தியாக, அடுத்தடுத்த பக்கங்களுக்கு தாவிப்போக எந்தத் தடையும் இல்லை. கவிதை எழுதுவது ஒரு கலை. அதைத் தேடிப் போவது அனுபவம். இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது இரண்டுமே சித்திக்கிறது.
நன்றி: குங்குமம், 2/9/2016.