நபிகளாரின் பொன்மொழிகள்
நபிகளாரின் பொன்மொழிகள், ரஹ்மத் பதிப்பகம், விலை 400ரூ.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் பொன்மொழிகள் தொகுப்புக்கு ‘ஹதீஸ்’ என்று பெயர். ஐம்பதுக்கும் மேற்பட்ட நபிமொழித் தொகுப்புகள் வெளிவந்தபோதிலும், இமாம் புகாரி இஸ்மாயில், இமாம் முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ், திர்மிதீ, அபூதாவூத், இப்னு மாஜா, நஸயீ ஆகியோர் தொகுத்த ஆறு நூல்களே நம்பிக்கைக்குரிய ஆதாரபூர்வ நூலாகக் கருதப்படுகிறது.
இவற்றில் அமாம் புகாரி தொகுத்த ஸஹீஹுல் புகாரி, முஸ்லிம், திர்மிதீ ஆகிய நபிமொழித் தொகுப்புகளை ரஹ்மத் பதிப்பகம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இப்போது அபூ, தாவூத் (ரஹ்) தொகுத்த நபிகளாரின் பொன்மொழிகளின் முதல் பாகம் வெளிவந்துள்ளது.
இதில் நபிமொழித் தொகுப்பின் மூலம், தமிழாக்கம், அடிக்குறிப்பு ஆகியவற்றோடு தூய்மை, தொழுகை தொடர்பான 1406 நபிமொழிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் அபூ தாவூத் அவர்களின் வாழ்க்கை குறிப்பு, கலைச்சொல் விளக்கம் ஆகியவையும் உள்ளன. முஸ்லிம்களின் இல்லங்களில் அவசியம் இருக்க வேண்டிய நூல்.
நன்றி: தினத்தந்தி, 31/8/2016.