நம்பிக்கை நாட்காட்டி
நம்பிக்கை நாட்காட்டி, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், பக்., 120, விலை 80ரூ.
என் பெயர் நம்பிக்கை
அனுபவங்கள் ஒவ்வொன்றும் எதையாவது கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கும். அந்த அனுபவங்களே நம்முடைய வாழ்விற்கான அர்த்தங்கள். எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும் என்றால், நம்முடைய நிகழ்கால வாழ்க்கை சிறப்பாகவும், ரசனையோடும் இருத்தல் அவசியமாகிறது என்பதை படைப்பின் மூலம் உணர்ந்து, மற்றவர்களையும் வாசிப்பின் மூலம் உணர வைத்திருக்கிறார் நூலாசிரியர் சங்கரராமன்.
மொத்தம், 48 தலைப்புகளில் பக்கத்திற்கு பக்கம் சிந்திக்க வைத்திருக்கிறார். தலைப்புகளின் துவக்கமும், முடிவிலும் ஒரு சில வரிகளில் அதன் கருவை சாறாக்கி தந்துள்ளதிலும், இப்புத்தகத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது.
-வின்.
நன்றி: தினமலர், 25/9/2016