வள்ளலாரின் சமூகச் சிந்தனைகள்
வள்ளலாரின் சமூகச் சிந்தனைகள், டாக்டர் மு. நீலகண்டன், கனிஷ்கா புத்தக இல்லம், விலை 130ரூ.
வள்ளலார் ராமலிங்க சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகவும், அவருடைய சமூக சீர்திருத்தக் கருத்துக்களை விரிவாகவும் கூறும் நூல். வள்ளலார் எப்படி இருப்பார், அவருடைய நடை – உடை – பாவனைகள் எப்படி என்பதையும் ஆசிரியர் வர்ணித்துள்ளார். வள்ளலாரின் கருத்துக்கள், வைரங்களாக ஜொலிக்கின்றன.
அவற்றில் ஒன்று
‘இறந்தவர்களை எரிக்கக்கூடாது, இறந்தவுடன் எந்தச் சடங்கும் செய்யக்கூடாது. அவர் எந்த ஆடையில் இருந்தாரோ அப்படியே அடக்கம் செய்துவிட வேண்டும். யாரும் அழவோ, துயரப்படவோ கூடாது, பால் தெளித்தல், திதி கொடுத்தல் போன்றவைகளை செய்யக்கூடாது.”
நன்றி: தினத்தந்தி, 5/10/2016.