கிராம ஊராட்சி நிர்வாகம்
கிராம ஊராட்சி நிர்வாகம், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக். 344, விலை 260ரூ.
‘இந்தியா கிராமங்களில் வாழ்கிறது. நாட்டின் முதுகெலும்பு கிராமம்தான். கிராமம் உயர்ந்தால்தான் நாடு முன்னேறும்’ என்பது தேசத்தந்தை காந்திஜியின் உறுதியான கருத்து. இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் கிராமப்புறங்களில் வசிப்பதால், அவர்களின் சமூகப் பொருளாதார மேம்பாடு வளர்ச்சி அடைய வேண்டும். அதற்கு ஊரக வளர்ச்சி மிக முக்கியம். எனவே ஊரக வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களையும், விதிகளையும் வகுத்துள்ளன.
அந்த வகையில் தமிழ்நாட்டில் மாவட்டம் ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சி என மூன்றடுக்கு ஊராட்சி முறைகள் நடைமுறையில் உள்ளது. இதில் கிராம ஊராட்சிக்கு தலைவர்களும், உறுப்பினர்களும் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? இந்தப் பதவியில் உள்ளவர்களுக்கு உரிய பொறுப்புகள், கடமைகள் என்ன? அவற்றை செயல்படுத்த அரசு விதித்துள்ள வழிமுறைகள் என்ன?
கிராம ஊராட்சிக்கான வருவாய் இனங்கள், இவற்றில் கையாளப்படும் மற்றும் பராமரிக்கப்டும் கணக்குகளின் வகைகள், ஊராட்சி தணிக்கைகள் முறைகள் மற்றும் ஊராட்சிப் பணிகள், அவற்றைச் செயல்படுத்தும் முறைகள், ஊரக வளர்ச்சிக்கு மத்திய – மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களையும், விதிகளையும் வகுத்துள்ளன. அந்த வகையில் தமிழ்நாட்டில் மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சி – என மூன்றடுக்கு ஊராட்சி முறைகள் நடைமுறையில் உள்ளது.
இதில் கிராம ஊராட்சிக்கு தலைவர்களும், உறுப்பினர்களும் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? இந்தப் பதவியில் உள்ளவர்களுக்கு உரிய பொறுப்புகள், கடமைகள் என்ன? அவற்றை செயல்படுத்த அரசு விதித்துள்ள வழிமுறைகள் என்ன? கிராம ஊராட்சிக்கான வருவாய் இனங்கள், இவற்றில் கையாளப்படும் மற்றும் பராமரிக்கப்படும் கணக்குகளின் வகைகள், ஊராட்சி தணிக்கை முறைகள் மற்றும் ஊராட்சிப் பணிகள், அவற்றைச் செயல்படுத்தும் முறைகள், ஊரக வளர்ச்சிக்கு மத்திய – மாநில அரசுகளின் திட்டங்கள்… என்று ஊராட்சி குறித்த அனைத்து விபரங்களும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஊராக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள், தலைவர்கள் தங்களது நிர்வாகச் செயல்திறனை மேம்படுத்துவதற்கு உரிய அனைத்து விபரங்களையும் அறிந்துகொண்டு, நல்லவிதமாகச் செயலாற்ற இந்நூல் பெரிதும் வழி காட்டும்.
-பரக்கத்.
நன்றி: துக்ளக், 23/11/2016.