சாமானுயனுக்கான சட்டங்கள்
சாமானுயனுக்கான சட்டங்கள், வழக்கறிஞர் த. ராமலிங்கம், விகடன் பிரசுரம், விலை 90ரூ.
சிக்கல்களிலிருந்து விடுபட, சிக்கல்களை எதிர்கொள்ள சாமானியன் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படையான சட்டங்களையும், அதன் வழிமுறைகளையும் தெளிவாக உணர்த்துகிறது இந்த நூல்.
நீதிமன்றம், காவல் நிலையம் இவற்றுள் ஏதோ ஒரு வேலையாக நுழைபவர்களுக்கு, சில சட்ட நிலைகள் மற்றும் நடைமுறைகள் கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும் என்பதே இந்த நூலின் நோக்கம்.
பிணை, விசாரணை, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், காவல் துறையின் கடமை, சிறைச்சாலையில் கைதிகள் வைக்கப்பட வேண்டிய முறைகள், நீதிமன்றத்தில் சாமானியன் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் ஆகியவற்றை விரிவாக விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் வழக்கறிஞர் த. ராமலிங்கம்.
நன்றி: தினத்தந்தி, 9/11/2016.