கணையாழிக் கதைகள் (1995-2000)
கணையாழிக் கதைகள் (1995-2000), தொகுப்பு ஆசிரியர்கள்: ம.ரா., க.முத்துக்கிருஷ்ணன், வேல் கண்ணன், கவிதா பப்ளிகேஷன், பக். 288, விலை ரூ. 210.
நவீன தமிழ் இலக்கியத்தில் “கணையாழி’ என்ற பெயர் பல உணர்வுகளைத் தூண்டக் கூடியது. நவீனம் என்றால் 1960-களுக்குப் பிந்தைய நவீன காலம். ஆனால் இப்போது விமர்சனத்துக்கு வந்துள்ள புத்தகம், புதிய தலைமுறையின் தலைமையின் கீழ் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு.
ஒரே இதழிலிருந்து மூன்று கதைகள் கூட இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. மிகத் தரமான கதைகள் மட்டுமே ஒவ்வோர் இதழிலும் வெளிவந்ததை இது காட்டுவதாகக் கொள்ளலாம் அல்லது தளர்வான தேர்வு முறையாகவும் கொள்ளலாம்.
கதை வெளியான இதழின் மாதம், பக்கத்தைக் குறிப்பிடும் அட்டவணை பின்குறிப்பாக இருக்கிறது. ஆனால், மூன்று தொகுப்பாளர்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில், இடம் பெற்ற கதைகளுக்கான உள்ளடக்கம் இல்லை.
ஆங்காங்கே தவிர்த்திருக்கக் கூடிய எழுத்துப் பிழைகள். சில கதைகள் ஆசைக்கு வேண்டியே தொகுத்தவையாக உள்ளன.
இந்தக் குறைகள் மிகப் பிரதானமாகத் தெரிகின்றன என்றாலும், ஒரு சில கதைகள் தொகுப்பில் பளிச்சிடுகின்றன. அன்றாட வாழ்வின் சாதாரண நிகழ்வுகளில் ஒளிந்திருக்கும் சிறுகதையை அ.முத்துலிங்கம் வெளிப்படுத்துகிறார்.
நன்றி:தினமணி.