வரலாற்றுத்தடத்தில் மதுரை நாயக்க மன்னர்கள்

வரலாற்றுத்தடத்தில் மதுரை நாயக்க மன்னர்கள் , ஜெகாதா, ஸ்ரீசெண்பகா பதிப்பகம்,  பக்.128, விலை 80ரூ.

வரலாற்றுத்தடத்தில் மதுரை நாயக்க மன்னர்கள்

ஏற்கெனவே அ.கி. பரந்தாமனார் எழுதிய “மதுரை நாயக்க மன்னர் கால வரலாறு’‘ என்றநூலின் சுருக்கமாகவே இந்த நூல் உள்ளதாகக் கொள்ளலாம். வரலாற்றுச் செய்திகளை எந்த நூலாசிரியர் எழுதினாலும் ஒரே மாதிரியாகத்தான் விவரிக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், வரலாற்றை விவரிக்கும் முறையில் இந்நூலாசிரியர் தனது தனித்துவத்தை நிலைநிறுத்த தவறிவிட்டார் என்றே கூற வேண்டும்.

நூலில் ஆறுதலான விஷயங்களும் ஆங்காங்கே உள்ளதை மறுக்க முடியாது. மதுரை புதுமண்டபம் கட்டிய சிற்பி சுமந்திரமூர்த்தி ஆசாரிக்கு திருமலை நாயக்க மன்னர் தங்கத்தாலான விரல் செய்து கொடுத்த விஷயம், தனக்கு பெண் கேட்டு கொடுக்காததால், தஞ்சை விஜயராகவர் மீது மதுரை சொக்கநாத நாயக்கர் படையெடுத்தது, அதனைத் தொடர்ந்து வெங்கண்ணா என்பவரால் தஞ்சை மராட்டிய மன்னன் எக்கோஜி வசமானது உள்பட பல சரித்திர நிகழ்வுகள் படிப்போரை ஆறுதல்படுத்துகின்றன.

மொத்தத்தில் இந்த நூலைப் படிக்கும் போது பழைய மொந்தையில் புதிய கல்லாக இருப்பதாக உணருவதைத் தவிர்க்க முடியவில்லை என்பதே உண்மை.

நன்றி:தினமணி, 09/1/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *