சத்யஜித்ரே வாழ்வும் வழியும்

சத்யஜித்ரே வாழ்வும் வழியும், விகடன் பிரசுரம், விலை 160ரூ.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் புகழ் தேடித்தந்தவர் சத்யஜித் ரே. 1954-ல் அவருடைய முதல் படமான “பாதேர் பாஞ்சாலி” வெளிவந்தது. சர்வதேச பட விழாக்களில் பல பரிசுகளை வாங்கிக் குவித்தது. வாழ்நாள் சாதனைக்காக சிறப்பு ஆஸ்கார் பரிசு இவருக்குக் கிடைத்தது.

உடல் நலம் இல்லாத காரணத்தால், ஆஸ்கார் குழுவினரே கல்கத்தாவில் உள்ள அவர் வீட்டக்கு நேரில் சென்று பரிசை வழங்கினர். “திரைப்பட உலகின் மகத்தானவர் சத்யஜித் ரேதான்” என்று உலகப்புகழ் பெற்ற ஜப்பானிய டைரக்டர் அகிரா குரசோவா பாராட்டியதில் இருந்தே, அவர் பெருமையை அறியலாம்.

இத்தகைய உலகப்புகழ் பெற்ற மாமனிதரின் வரலாற்றை வீ.பா. கணேசன் எழுத, விகடன் பிரசுரம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. புத்தகம் முழுவதும் ஆர்ட் காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளது. அவருடைய சிறந்த படங்களின் கதைகள் இடம் பெற்றுள்ளது சிறப்பு அம்சம்.

நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *