நரகம்
நரகம், எதிர் வெளியீடு.தமிழில் இரா. செந்தில்.
உலகப்புகழ் பெற்ற நாவல்
இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர்கள், அமெரிக்க எழுத்தாளரான டான் பிரவுன் பற்றி நிச்சயம் அறிந்திருப்பார்கள். அவர்எ ழுதிய “டாவின்சி கோட்” என்ற நாவல் 70-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, 20 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி உள்ளன.
சினிமாப் படமாகவும் வெளிவந்துள்ளது. அவர் சமீபத்தில் எழுதிய நாவல்தான் “நரகம்”. இதுவும் விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. வாழ்க்கையில் தான் சந்தித்த நபர்களை வைத்தே நாவல்களை சிறப்பாக எழுதுவதில் வல்லவர் டான் பிரவுன்.
“நரகம்” நாவலும் அப்படிப்பட்டதுதான். 758 பக்கங்கள் கொண்ட கனமான இந்த நாவல், விறுவிறுப்புடன் விரைந்து செல்கிறது. தமிழில் மொழி பெயர்த்துள்ள இரா. செந்தில், மூலத்தின் சுவை குன்றாமல் மொழி பெயர்த்திருக்கிறார்.
நன்றி: தினத்தந்தி, 1/3/2017.