இல்லுமினாட்டி- உலகையே நோட்டமிடும் கண்கள்

இல்லுமினாட்டி- உலகையே நோட்டமிடும் கண்கள் – கார்த்திக் ஸ்ரீநிவாஸ், வானவில் புத்தகாலயம்,  பக்.176, விலை ரூ.133.

அண்மைக்காலமாக முகநூல், சுட்டுரைகளில் மிகவும் பரபரப்பாகச் சுட்டப்படும் சொல் இல்லுமினாட்டி. ஒளிபொருந்தியவர்கள், ஞானிகள் என இச்சொல்லுக்குப் பொருள் கூறப்பட்டாலும், நவீன யுகத்தில் சர்ச்சைக்குரிய குழுக்கள், உலகத்தின் மூளைகள் என்பார்களாம்.

காசேதான் கடவுளடா, கடவுள் பாதி மிருகம் மீதி… என விறுவிறுப்பைக் கூட்டும் தலைப்புகளோடு 15 அத்தியாயங்கள். இந்தக் கிரகத்தையே ஆள்வதுதான் இல்லுமினாட்டிகளின் நோக்கம்.

மிக்கி மெளஸ் நாயகன் வால்ட் டிஸ்னி, இல்லுமினாட்டி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்கிறார்கள். மூளைச்சலவை செய்யும் வேலையை அவர் சிறப்பாகச் செய்தார் என்கிறார்கள்.

கடைசியில், 13 இல்லுமினாட்டி குடும்பங்களுக்கான தலைவி இங்கிலாந்து மகாராணி எலிசபெத் என்பதும், இல்லுமினாட்டிகளை ஏற்காத இளவரசி டயானா சாலை விபத்தில் உயிரிழந்ததுமாக தொடர்ந்து நடந்து வரும் ஆய்வுகள் எல்லாமும் வியப்பில் ஆழ்த்துகின்றன. உலகின் பெரிய 30 நாடுகளில் இல்லுமினாட்டிகளின் ஆட்கள் இருக்கிறார்களாம்.

வாடிகன் நகரம், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, எல்லா சிக்கலான காரணிகளின்போதும் உபயோகப்படுத்தப்படும் சிஐஏ என்ற உளவு நிறுவனம் எல்லாமும் இல்லுமினாட்டிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன என்கிறார்கள்.

இவை எல்லாவற்றையும் கூறி பீதியைக் கிளப்புவதல்ல நோக்கம்'' என்கிறார் நூலாசிரியர்.

நன்றி:தினமணி,3/4/2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *