நான் ஓர் இந்துவாக சாகமாட்டேன்
நான் ஓர் இந்துவாக சாகமாட்டேன், டாக்டர் அம்பேத்கர், தலித் முரசு, விலை 150ரூ.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தலித் மக்கள் துன்பப்படுவதற்கு இந்து மதம்தான் காரணம்” என்று கருதியவர் டாக்டர் அம்பேத்கர். “நான் பிரம்மன், விஷ்ணு, ராமன், கிருஷ்ணன் ஆகிய கடவுள்கள் மீது நம்பிக்கை வைக்கவும் மாட்டேன். அவர்களை வணங்கவும் மாட்டேன்” என்று கூறியவர்.
1956-ம் ஆண்டில், 10 லட்சம் தலித் மக்களுடன், இந்து மதத்தைத் துறந்து புத்த மதத்தைத் தழுவினார். இவ்வாறு லட்சக்கணக்கான மக்கள் ஒரே நாளில் மதம் மாறிய நிகழ்ச்சி உலகில் வேறு எங்கும் நிகழ்ந்தது இல்லை.
“நான் ஓர் இந்துவாக சாகமாட்டேன்” என்பது அம்பேத்கரின் முக்கியமான நூல். அதை தாயப்பன் அழகிரிசாமி அழகிய தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
நன்றி: தினத்தந்தி, 29/3/2017.