இக்கால இந்தியா மற்றும் கல்வி
இக்கால இந்தியா மற்றும் கல்வி, வி.நடராஜன், சாந்தா பப்ளிஷர்ஸ், பக்.190, விலைரூ.120.
பி.எட். பட்டப்படிப்புக்கான பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, இன்றைய இந்திய கல்வி பற்றி எழுதப்பட்டுள்ள நூல்.
பல்வேறு இனம், மொழி, நிலப்பரப்பு, பொருளாதார, கலாசார வாழ்க்கைகள் கொண்ட பன்முகத்தன்மை உள்ள ஒரு நாட்டில், பலதரப்பட்ட மக்களுக்கும் ஒரே விதமான கல்வியைக் கொடுப்பதில் உள்ள சிக்கல்களை நூல் ஆராய்கிறது.
பள்ளிக்கூடத்தில் சேர்ந்த குழந்தைகள் இடையிலேயே படிப்பை நிறுத்திவிடுவது, அல்லது அடுத்த வகுப்புக்குப் போக முடியாமல் தேர்வில் தோல்வியடைந்து தேங்கிவிடுவது, பெண் குழந்தைகளைப் படிக்க வைப்பதில் உள்ள பிரச்னைகள், கிராமப்பகுதிகள், மலைப்பிரதேசங்களில் வாழ்பவர்களுக்குக் கல்வி தருவதில் உள்ள சிக்கல்கள் எல்லாம் நூலில் ஆராயப்பட்டுள்ளன.
சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும் உள்ள இந்தியக் கல்விமுறைகள், கல்விக் கோட்பாடுகள், உலகமய காலகட்டத்தில் கல்வி தனியார்மயமானது, தனியார்மயமானதால் ஏற்படும் நன்மை, தீமைகள், ஆன்லைன் கல்வி என கல்வி தொடர்பான அனைத்து விஷயங்களும் கூறப்பட்டுள்ளன.
பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு, கல்வியை வணிகமயமாக்குதல் தவிர்க்க முடியாதது போன்ற விவாதத்துக்குரிய பிரச்னைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன
நன்றி:தினமணி, 8/5/2017