காலத்தை வெல்லும் திருமுறைகள்
காலத்தை வெல்லும் திருமுறைகள், ராதா நடராஜன், கற்பகம் புத்தகாலயம், பக்.224, விலை ரூ.150.
சைவர்கள் தமிழ் வேதமாகக் கருதுவது அருளாளர்கள் அருளிய பன்னிரு திருமுறைகளை.
திருமுறைப் பாடல்கள் பாடிய அருளாளர்களின் வரலாற்றில் நிகழ்ந்த – இறைவன் நிகழ்த்திய அற்புத நிகழ்ச்சியின் பின்னணியிலேயே திருமுறைப் பாடல்கள் அமைந்துள்ளன என்பதை இந்நூல் விவரிக்கிறது.
சமயக் குரவர்களான நால்வர் பெருமக்களின் (திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தர், மாணிக்கவாசகர்) வரலாற்றில் நிகழ்ந்த சில அற்புத நிகழ்ச்சிகளை மட்டும் எடுத்துக்கொண்டு, இறைவன் நிகழ்த்திய அற்புதம், திருமுறைகளின் மாண்பு, சில நாயன்மார்களின் சிவத்தொண்டு, திருத்தலப் பெருமை, பதிகங்களில் ஒரு சில பாடல்கள், புராணக் கதைகள் முதலியவற்றை நூல் விவரிக்கிறது. மேலும், ‘கருணைக் கொடை 39’ என்ற பகுதியில் உள்ள சைவ சித்தாந்த விளக்கம் படித்தறிய வேண்டியவை
‘திருமுறைப் பாடல்களைப் பக்தியுடனும், நம்பிக்கையுடனும் பாடி வந்தால், நோய் தீரும், வேலை கிடைக்கும், பிள்ளைப்பேறு வாய்க்கும், செல்வம் பெருகும், திருமணத்தடை நீக்கும், கடன் தீரும், விஷம் முறியும்’ என பலவகைப் பயன்களை இந்நூல் கூறுகிறது.
‘சிவபெருமானுடைய ஆபரணங்கள், செய்கைகள் பற்றியும், சைவத்தைப் பற்றியும், நிறைய சந்தேகங்கள், தெரியாத விடைகள் பலருக்கும் இருக்கலாம். இதற்குத் திருவாசகத்தில் உள்ள திருச்சாழலைப் படித்தாலே போதுமானது, நல்ல தெளிவு கிடைத்துவிடும் 39’ என்ற விளக்கம் அற்புதம். பக்கத்துக்குப் பக்கம் அருளாளர்களின் வரலாற்றுத் தொடர்புடைய ஓவியங்களும், படங்களும் நூலுக்கு சிறப்பு சேர்க்கின்றன.
நன்றி: தினமணி, 29/5/2017.