காலத்தை வெல்லும் திருமுறைகள்

காலத்தை வெல்லும் திருமுறைகள், ராதா நடராஜன், கற்பகம் புத்தகாலயம், விலை 150ரூ. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகியோர் வரலாற்றில் நடந்த அதிசய நிகழ்ச்சிகளின் அடிப்படையில் அல்லது பின்னணியில் தான் திருமுறைகள் அமைந்துள்ளன. அந்த வகையில் திருமுறைகளில் உள்ள சில வரிகளை மட்டும் விளக்கி எப்படி திருமுறைகள் நால்வர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு ஆதாரமாக, சாட்சியாக அமைந்துள்ளன என்பதை இந்த நூலில் ராதா நடராஜன் அழகுற எடுத்துரைக்கிறார். நன்றி: தினத்தந்தி, 26/4/2017.‘

Read more

காலத்தை வெல்லும் திருமுறைகள்

காலத்தை வெல்லும் திருமுறைகள், ராதா நடராஜன்,  கற்பகம் புத்தகாலயம், பக்.224,  விலை ரூ.150. சைவர்கள் தமிழ் வேதமாகக் கருதுவது அருளாளர்கள் அருளிய பன்னிரு திருமுறைகளை. திருமுறைப் பாடல்கள் பாடிய அருளாளர்களின் வரலாற்றில் நிகழ்ந்த – இறைவன் நிகழ்த்திய அற்புத நிகழ்ச்சியின் பின்னணியிலேயே திருமுறைப் பாடல்கள் அமைந்துள்ளன என்பதை இந்நூல் விவரிக்கிறது. சமயக் குரவர்களான நால்வர் பெருமக்களின் (திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தர், மாணிக்கவாசகர்) வரலாற்றில் நிகழ்ந்த சில அற்புத நிகழ்ச்சிகளை மட்டும் எடுத்துக்கொண்டு, இறைவன் நிகழ்த்திய அற்புதம், திருமுறைகளின் மாண்பு, சில நாயன்மார்களின் சிவத்தொண்டு, திருத்தலப் […]

Read more